Category Archives: மூலம்
மிளகு
* ஒரே ஒரு மிளகு போதும்… உண்ணும் உணவு சுவையாக.
* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.
* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.
* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.*
* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.
மருத்துவப் புது மொழி
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்ணைக் குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
மூல நோய்
மூல நோயை நீக்க உதவும் கருணைக்கிழங்கு
**********************************************************
பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும் இன்னல்கள் சொல்ல முடியாதவை. மனிதனின் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடல் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீக்கமாக காணப்படும். மலவாய் பகுதியில் நல்ல ரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான ரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன.
அசுத்த ரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோய் என அழைக்கப்படுகிறது. இதனால் அதிக வலி, ரத்தக்கசிவு, மலம் இறுகுதல், உட்காரும்போது வலி போன்றவை ஏற்படும். மூலநோய் உள் மூலம், வெளி மூலம் என இரு வகைப்படும். உள் மூலத்தில் மேல் பகுதி ரத்தக் குழாய்களும், வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி ரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.
அறிகுறிகள்
***************
மலம் கழிக்கச்செல்லும்போது மலத்தை இறுகச்செய்து, மலம் போக முடியாத அளவிற்கு வலி ஏற்படும். மேலும் ரத்தத்தோடு மலம் வெளிவரும். மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்குகளின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும், மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயிலில் வலி, நமைச்சல் போன்றவை உண்டாகும்.
சித்திர மூலம்(சித்தர் மூலம்)
சித்தர் மூலம்
இதற்கு கொடிவேலி என்ற பெயரும் உண்டு. இதன் பூக்களை வைத்து இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். ஒன்று சிவப்பு சித்திர மூலம் (சிவப்பு நிற பூக்கள் கொண்டது); இரண்டாவது வெள்ளை சித்திர மூலம் (வெண்மை நிற பூக்கள் கொண்டது). இதன் பூக்கள் கசக்கப்படும் போது ஒரு விதமாக வழுவழுப்பாக மாறும் தன்மை கொண்டது. பொதுவாக சிவப்பு சித்திரமூலம் மூல நட்சத்திரத்தில் பிறந்தோரின் தோஷங்களைப் போக்கக்கூடியது. அவர்கள் பரிகாரமாக சிவப்பு சித்திர மூலத்தின் இலைகளை அந்த நட்சத்திரத்தில் உடல் முழுதும் பூசி நீராடுவதுண்டு.
மூல நோய் ஒரு சிக்கலான நோய். பெரும்பாலும் மூல நோய்க்கு அறுவை சிகிச்சையைத்தான் நாடுகின்றனர். ஆனால் இது மீண்டும் மீண்டும் வளரும். நோயின் அடிப்படையைக் காணாமல் அறுவை சிகிச்சை செய்வது, புண்ணை மறைக்கும் வெற்றுக் கட்டுக்குச் சமம். மூல நோயின் அடிப்படை மற்றும் தாக்கம் இவற்றைக் கொண்டு எட்டு வகையாகப் பிரிக்கலாம். ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கோடி மூலம், கண்ட மாலை என எட்டு வகைகள் உண்டு.