Tag Archives: புங்க மரம்

சொரியாசிஸ்

நன்றி:  ரிலாக்ஸ் ப்ளீஸ்

சொரியாசிஸ்சை குணப்படுத்தும் புங்க மரம்
சுத்தமான காற்றை கொடுக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்கவல்லதும், உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியதும், பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமான புங்க மரத்தின் பயன்கள் பற்றி தெரியுமா. வீட்டின் முன்பு இருக்கக் கூடியது புங்க மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது.

நல்ல சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது. புங்க விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பொடித்து வைத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி குடிக்கத்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது. இது ஆஸ்துமா, நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம். புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சொரியாசிஸ்சுக்கான மருந்து தயாரிக்கலாம்.