Monthly Archives: January 2022

சூலைப் புண்

கந்தகம் விராகனிடை ஐந்து, வெள்ளைக் குங்கிலியம் விரகனிடை பத்து, பொடித்து, பத்து குன்றியிடை வெள்ளீயத்தை உருக்கி அதில் இரசம் மூன்று விராகன் விட்டுக்கிண்டி எடுத்துப் பொடித்து, மேற்கூறிய இரண்டையும் சேர்த்து அரைத்து, ஆறு பங்கு செய்து மூன்று நாள் ஆறுவேளை புகை போடவும். பத்தியம் கொள்ளவும். நாங்கு நாட்களுக்கு ஒரு முறை தலை முழுகுதல் வேண்டும். இரண்டு மணி நேரம் தண்ணீரில் குளித்தல் நன்று.

இது வேறு;
காரீயம், இரசம் விராகன் முக்கால், துத்தம், துரிசு, வெள்ளைப் பாஷாணம், மிளகு, கடுகு விராகன் பதிமூன்று, கருங்குங்கிலியம் பணவிடை பதினாறு, அரிதாரம் பணவிடை ஐந்து, கவுரிபாஷாணம் விராகன் ஐந்து, மேற்படி காரீயத்தை உருக்கி இரசத்தை விட்டு முரித்து எடுத்து மற்றவைகளையும் சேர்த்து பருத்தி இலைச்சாறு, கையாந்தகரைச் சாறு, ஊமத்த இலைச்சாறு, வேலிப்பருத்தி இலைச்சாறு, இவைகளில் ஒவ்வொரு சாற்றிலும் ஒவ்வொரு நாழிகை அரைத்து ஒன்பது பாகமாகக்கொண்டு புகை போடவும்.
பத்தியம்:- பழஞ்சோறு, உப்பு, வெங்காயம், விளக்கெண்ணை. தண்ணீரில் முழுகவும்.
முறிவு:- வெல்லம்

சூலை நோய்

பரங்கிப்பட்டை சூர்ணம், கோதுமை மாவு சரியிடை, தண்ணீர் விட்டுப் பிசைந்து, அதனை ஒரு சட்டியில் சதுரக்கள்ளியைப் பொடியாக நறுக்கி இரண்டு படி தண்ணீரில் போட்டு அச்சட்டிக்கு வேடுகட்டி அதன்மேல் மேற்படி மாவை வைத்து பிட்டு வேகவைப்பதைப்போல் அவித்து, எடுத்து நான்கு நாள் உண்ணவும். கைப்பு, புளி, கடுகு, பூசணிக்காய் பத்தியம்.

குட்டங்கள்

கடுகு, திரிபலை, சாரணைவேர், ஊழாத்திப்பட்டை, அமுக்கராங்கிழங்கு, பிறப்பங்கிழங்கு, நறுக்குமூலம், தூதுவளைவேர், சிறுதேக்கு, ஓமம், வாய்விளங்கம், செவியம், சீரகம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, பூலாங்கிழங்கு, ஆனைதிப்பிலி, சங்கம்பட்டை வகைக்குப் பலம் ஒன்று. இவற்றை ஆற்று வெள்ளத் தண்ணீரிலிட்டு ஐந்து நாள் ஊறவைத்து பிழிந்த கிஷாயத்தில், வெள்ளெருக்கின் சாறு, கரிப்பான் சாறு, ஆயில்சாறு, மேற்படி பட்டைச்சாறு சேர்த்து அதில் பரங்கிப்பட்டை, சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம், ஓமம், பெருங்காயம் வகைக்கு விராகன் மூன்று, இவற்றை இளவறுப்பாக வறுத்து சூரணித்துக் கலக்கி தலை மயிர், குடல் நீக்கிய கோழிக்குள் வைத்துக்கட்டி தோலாயந்திரங்கட்டித் தொங்கவிட்டு மூடி, தீபாக்கினியாக முப்பது நாழிகை எரித்து இரண்டுபடி கிஷாயமி

ருக்கையில் இறக்கி, கோழியை எடுத்து எலும்பு நீக்கி, உலர்த்திச் சூரணித்து, வெருகடி அளவு தேனில் இருபத்தைந்து நாள் உட்கொள்ள குஷ்டம், சூலை நோய் தீரும்.

கிரந்தி, சூலை, கைகால் முடக்கு

சுத்தித்த குக்கில், சுத்தித்த பரங்கிப்பட்டை வகைக்கு பலம் ஆறு, சுத்தித்த கந்தகம் பலம் ஒன்று சேர்த்து சூரணம் செய்யவும். இதனில் ஒரு சிட்டிகை காலை மாலை சாப்பிடவும்.

இரத்தம் வடியும் புண்

பொடுதலை இலையை விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டவும்.

சீழ் விழும் புண்

பெரும்பி இலையை விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டவும்.