Tag Archives: வெள்ளைக் குங்கிலியம்

சூலைப் புண்

கந்தகம் விராகனிடை ஐந்து, வெள்ளைக் குங்கிலியம் விரகனிடை பத்து, பொடித்து, பத்து குன்றியிடை வெள்ளீயத்தை உருக்கி அதில் இரசம் மூன்று விராகன் விட்டுக்கிண்டி எடுத்துப் பொடித்து, மேற்கூறிய இரண்டையும் சேர்த்து அரைத்து, ஆறு பங்கு செய்து மூன்று நாள் ஆறுவேளை புகை போடவும். பத்தியம் கொள்ளவும். நாங்கு நாட்களுக்கு ஒரு முறை தலை முழுகுதல் வேண்டும். இரண்டு மணி நேரம் தண்ணீரில் குளித்தல் நன்று.

இது வேறு;
காரீயம், இரசம் விராகன் முக்கால், துத்தம், துரிசு, வெள்ளைப் பாஷாணம், மிளகு, கடுகு விராகன் பதிமூன்று, கருங்குங்கிலியம் பணவிடை பதினாறு, அரிதாரம் பணவிடை ஐந்து, கவுரிபாஷாணம் விராகன் ஐந்து, மேற்படி காரீயத்தை உருக்கி இரசத்தை விட்டு முரித்து எடுத்து மற்றவைகளையும் சேர்த்து பருத்தி இலைச்சாறு, கையாந்தகரைச் சாறு, ஊமத்த இலைச்சாறு, வேலிப்பருத்தி இலைச்சாறு, இவைகளில் ஒவ்வொரு சாற்றிலும் ஒவ்வொரு நாழிகை அரைத்து ஒன்பது பாகமாகக்கொண்டு புகை போடவும்.
பத்தியம்:- பழஞ்சோறு, உப்பு, வெங்காயம், விளக்கெண்ணை. தண்ணீரில் முழுகவும்.
முறிவு:- வெல்லம்

கிரந்திப்புண், மேகக்கட்டி, சிலந்திப்புண்

வெள்ளைக் குங்கிலியம், கார்போக அரிசி, மனிதன் எலும்பு, வகைக்கு விரகன் இரண்டு, வெங்கக்கல் பொடி விராகன் நாங்கு, கந்தகம் விராகன் ஒன்று, ஆக சேர்த்துப் பொடித்து வெங்கல வட்டிலில் இட்டு சிறிது நல்லெண்ணை கூட்டி செம்புக் குவளையால் அரைத்து களிம்பு செய்து போடவும்.

கண்டமாலை

தைராயிடு சுரப்பியின் அசாதாரணமான வீக்கமே கண்டமாலை என அழைக்கப்படுகிறது. தைராயிடு சுரப்பியின் வீக்கத்தால் கழுத்தும் குரல்வளையும் வீக்கம் அடைகின்றன.

புங்கம்வேர், ஆயில்பட்டை, தூதுவளைவேர், கழற்சிவேர், வெள்ளறுகு, நிலஆவரைவேர், சங்கங்குப்பிவேர், அவிரிவேர், சுக்கு, மிளகு, அப்பக்கோவைக் கிழங்கு, வெள்வெங்காயம், கருங்குங்கிலியம், வாய்விளங்கம், கடுகு, வெந்தயம், திப்பிலி மூலம், கண்டுபரங்கி வகைக்கு பலம் ஒன்று, சிற்றரத்தை பலம் 5, திப்பிலி பலம் 8 இவைகளை இடித்து, 3பட் நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி கடுகு பதத்தில் வடித்து இரண்டு விராகனிடை காலை மாலை உட்கொள்ளவும். பத்தியம் காக்கவும்.

இதுவுமது:

அரிதாரத்தை நீல நிறமாகச் சுட்டு நீரில் அரைத்து சிலையிலூட்டி திரியேற்றப் புண்ணும், சீழும் மாறும்.
கழலை அரையாமல் புண்ணாகாமல் கட்டியாக இருந்தால் அந்தக் கழலையை அறுத்து திரி போடவும்.
மூன்று அல்லது நான்கு நாள் சென்றபின் செம்புண்ணானால் வெள்ளைக் குங்கிலியம், படிகாரம், மயில் துத்தம், பொன்மெழுகு வகைக்கு விரகன் ஒன்று பொடித்து சிறிது நல்லெண்ணையிட்டுக் காய்ச்சி தண்ணீரில் விட்டு எடுத்து வெங்கல வட்டிலில் போட்டு செம்புக்குவளையால் அரைத்து களிம்பு செய்து துணியில் தடவிப் புண்ணுக்குப் போடவும். மறு நாள் புளியந்தழை அவித்த தண்ணீரில் கழுவவும்.