Tag Archives: சித்திர மூலம்(சித்தர் மூலம்) –

சித்திர மூலம்(சித்தர் மூலம்)

11116472_1454670831515224_4356879715984780595_o

சித்தர் மூலம்

இதற்கு கொடிவேலி என்ற பெயரும் உண்டு. இதன் பூக்களை வைத்து இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர்.  ஒன்று சிவப்பு சித்திர மூலம் (சிவப்பு நிற பூக்கள் கொண்டது);  இரண்டாவது வெள்ளை சித்திர மூலம் (வெண்மை நிற பூக்கள் கொண்டது). இதன் பூக்கள் கசக்கப்படும் போது ஒரு விதமாக வழுவழுப்பாக மாறும் தன்மை கொண்டது. பொதுவாக சிவப்பு சித்திரமூலம் மூல நட்சத்திரத்தில் பிறந்தோரின் தோஷங்களைப் போக்கக்கூடியது. அவர்கள் பரிகாரமாக சிவப்பு சித்திர மூலத்தின் இலைகளை அந்த நட்சத்திரத்தில் உடல் முழுதும் பூசி நீராடுவதுண்டு.

மூல நோய் ஒரு சிக்கலான நோய். பெரும்பாலும் மூல நோய்க்கு அறுவை சிகிச்சையைத்தான் நாடுகின்றனர். ஆனால் இது மீண்டும் மீண்டும் வளரும். நோயின் அடிப்படையைக் காணாமல் அறுவை சிகிச்சை செய்வது, புண்ணை மறைக்கும் வெற்றுக் கட்டுக்குச் சமம். மூல நோயின் அடிப்படை மற்றும் தாக்கம் இவற்றைக் கொண்டு எட்டு வகையாகப் பிரிக்கலாம். ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கோடி மூலம், கண்ட மாலை என எட்டு வகைகள் உண்டு.