Category Archives: கொழுப்பு
இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி
நன்றி : Veeram Velanja Madurai
“சரிடே முருகா.. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”
“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”
“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”
“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”
“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடே… எண்ணெய்னால வரக்கூடியது…?”
“என்னாண்ணே சொல்றீங்க…?”
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”
“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”
“ நீ மட்டும் இல்லைடே முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”
“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”
“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”
“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”
“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?