Tag Archives: மணத்தக்காளி
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
இன்னும் எத்தனைஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான்மருந்து. புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது. ஒருதடவை சொன்னா சொன்னதுதான்.
இந்த பாடலை ஒவ்வொருவரும் எழுதிவைத்து கொள்ளுங்கள். எக்காலத்திலும் உதவும்.
இப்பாடல் அருந்தமிழ்மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
மருத்துவப் புது மொழி
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்ணைக் குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து