Tag Archives: விராலி மூலிகை
கிட்னியில் உண்டாகும் சர்க்கரை பாதிப்பை சரிசெய்யும் விராலி மூலிகை
Hymenodictyon Exclusum எனும் தாவரவியல் பெயர்கொண்ட சிறந்த ஒரு மூலிகைச்செடியாக, விராலி விளங்குகிறது. சூரிய ஒளியை நோக்கும் விதமாக, மேல்நோக்கி அமைந்திருக்கும் இதன் இலைகள், எளிதில் அவற்றிலிருந்து சாறு எடுக்க இயலாவண்ணம் வறண்ட இலைகளைக் கொண்டு அமைந்தவை.
சாறே எடுக்க முடியாத விராலி இலைகளிருந்து சாறெடுக்கும் வல்லமையே, இரச வாதத்துக்கு முதல் படி என்பது மட்டுமல்ல, அப்படி விராலி சாறெடுக்கும் வல்லமை மிக்கவரே, சிறந்த சித்த வைத்தியர் என சித்தர்கள் உரைக்கின்றனர். இப்படி அரிய ஆற்றல் கொண்ட விராலி இலைகள், அவற்றின் பட்டைகள் மற்றும் விதைகள், எலும்பை வலுவாக்கும், வீக்கம் மற்றும் கட்டிகளை கரைக்கும். ஜுரம் போக்கி உடல் சுவாச பாதிப்புகளை சரிசெய்யும். அரும்பெரும் மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும்.
விராலிச்செடிகள் மனிதர்க்கு உடலில் ஏற்படும் கட்டிகள், வீக்கங்கள் இவற்றை போக்கி, எலும்புகளை வலுவாக்கி, இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக்கும் ஆற்றல் மிக்கது. வியாதி எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகையான விராலி, உடலில் உள்ள நுண்ணிய நச்சு கிருமிகள் மற்றும் ஃபங்கஸ் எனும் பூஞ்சை தொற்றுகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது. சிறுநீரகத்தில் உண்டாகும் சர்க்கரை பாதிப்பை, சரிசெய்யும் தன்மை மிக்கது.