Tag Archives: வெந்தயக் கீரை
மருத்துவப் புது மொழி
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்ணைக் குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
உடலுக்குத் தேவை
இளமை தங்க | நெல்லிக்கனி |
இதயம் வலுப்பட | செம்பருத்திப் பூ |
மூட்டு வலி | முடக்கத்தான் கீரை |
இருமல், மூக்கடைப்பு | கற்பூரவல்லி – ஓமவல்லி |
நீரழிவு | அரைக்கீரை, வில்வம் |
வாய்ப்புண், குடல்புண் | மணத்தக்காளிகீரை |
உடல் பொன்னிறமாக | பொன்னாங்கண்ணி கீரை |
மாரடைப்பு | மாதுளம் பழம் |
ரத்தத்தை சுத்தமாக்க | அருகம்புல் |
ரத்த அழுத்தம் | துளசி, பசலைக்கீரை |
ரத்த சோகை | பீட்ரூட் |
புற்று நோய் | சீதா பழம் |
மூளை வலிமை | பப்பாளி பழம் |
நீரிழிவு | முள்ளங்கி |
வாயுத் தொல்லை | வெந்தயக் கீரை |
மார்பு சளி, இருமல் | சுண்டைக்காய், தூதுவளை |
சளி, ஆஸ்துமா | ஆடாதொடை. |
ஞாபகசக்தி | வல்லாரை கீரை |
அஜீரணம் | அன்னாசி பழம், புதினா |
முடி நரை | கல்யாண முருங்கை – முள் முருங்கை |
கண்பார்வை கூட | கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் |
மஞ்சள் காமாலை | கீழாநெல்லி |
சிறுநீரக கல் | வாழைத்தண்டு |