Category Archives: நோய்
ஆஸ்துமா – மூச்சுத் திணறல்
ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் போதிலும் கூட ஆஸ்துமா தொல்லைக்கு பலர் ஆட்பட்டு வருகின்றனர். சிலருக்கு சுற்றுச்சூழல் நிலைமைகளாலும், சிலருக்கு கோதுமை, முட்டைகள், பால், சாக்கலேட்டுகள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மாட்டிறைச்சி போன்ற உணவுகளாலும் கூட ஆஸ்துமா ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் சிலருக்கு மனச்சிக்கல்கள் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இளம் வயதில் ஆஸ்துமா ஏற்படும் 25 சதவீதத்தினருக்கு உணர்வு பூர்வ பாதுகாப்பின்மை, பெற்றோர்கள் அன்பும் அரவணைப்பும் இன்மை ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூல நோய்
மூல நோயை நீக்க உதவும் கருணைக்கிழங்கு
**********************************************************
பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும் இன்னல்கள் சொல்ல முடியாதவை. மனிதனின் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடல் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீக்கமாக காணப்படும். மலவாய் பகுதியில் நல்ல ரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான ரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன.
அசுத்த ரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோய் என அழைக்கப்படுகிறது. இதனால் அதிக வலி, ரத்தக்கசிவு, மலம் இறுகுதல், உட்காரும்போது வலி போன்றவை ஏற்படும். மூலநோய் உள் மூலம், வெளி மூலம் என இரு வகைப்படும். உள் மூலத்தில் மேல் பகுதி ரத்தக் குழாய்களும், வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி ரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.
அறிகுறிகள்
***************
மலம் கழிக்கச்செல்லும்போது மலத்தை இறுகச்செய்து, மலம் போக முடியாத அளவிற்கு வலி ஏற்படும். மேலும் ரத்தத்தோடு மலம் வெளிவரும். மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்குகளின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும், மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயிலில் வலி, நமைச்சல் போன்றவை உண்டாகும்.
சித்திர மூலம்(சித்தர் மூலம்)
சித்தர் மூலம்
இதற்கு கொடிவேலி என்ற பெயரும் உண்டு. இதன் பூக்களை வைத்து இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். ஒன்று சிவப்பு சித்திர மூலம் (சிவப்பு நிற பூக்கள் கொண்டது); இரண்டாவது வெள்ளை சித்திர மூலம் (வெண்மை நிற பூக்கள் கொண்டது). இதன் பூக்கள் கசக்கப்படும் போது ஒரு விதமாக வழுவழுப்பாக மாறும் தன்மை கொண்டது. பொதுவாக சிவப்பு சித்திரமூலம் மூல நட்சத்திரத்தில் பிறந்தோரின் தோஷங்களைப் போக்கக்கூடியது. அவர்கள் பரிகாரமாக சிவப்பு சித்திர மூலத்தின் இலைகளை அந்த நட்சத்திரத்தில் உடல் முழுதும் பூசி நீராடுவதுண்டு.
மூல நோய் ஒரு சிக்கலான நோய். பெரும்பாலும் மூல நோய்க்கு அறுவை சிகிச்சையைத்தான் நாடுகின்றனர். ஆனால் இது மீண்டும் மீண்டும் வளரும். நோயின் அடிப்படையைக் காணாமல் அறுவை சிகிச்சை செய்வது, புண்ணை மறைக்கும் வெற்றுக் கட்டுக்குச் சமம். மூல நோயின் அடிப்படை மற்றும் தாக்கம் இவற்றைக் கொண்டு எட்டு வகையாகப் பிரிக்கலாம். ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கோடி மூலம், கண்ட மாலை என எட்டு வகைகள் உண்டு.
சிறு பீளைச்செடி
சிறு பீளைச்செடி……..
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.
மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.
மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
இதை உட்கொள்ளும் போது மருந்து
வேளை செய்தால் சிலருக்கு
வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இம்மூலிகை மருந்தை நான் சுமார் 70 பேருக்கும் மேலாக எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த செடி எனது ஊரில் நிறைய விளைந்து கிடக்கிறது.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம்நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள் ஆபரேஷன் செய்திருப்பினும்
மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
முடக்கத்தான் கீரை சூப்
நன்றி –
சிம்பிள் & ஹெல்த்தி முடக்கத்தான் கீரை சூப்
தேவையானவை: வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப், முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி அளவு, நசுக்கிய பூண்டு 2 பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி 1, மிளகுத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, முடக்கத்தான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: வாயுத் தொல்லைக்கு அருமருந்து முடக்கத்தான் சூப். வாயுப் பொருமல், தொப்பை, அக்கி, வயிற்றுப்புழு, மசக்கை, பசி, ஏப்பம் மறைந்து உடலுக்கு தெம்பைக் கூட்டும். குடல் புழுக்கள் அழியும். மேல் வாய்வுப் பிடிப்பு, இடுப்பு வாய்வுப் பிடிப்பு விலகும். கை, கால் வலி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவந்தால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
#முடக்கத்தான்சூப்