குறுந்தொட்டி வேர் தைலம்

நன்றி: ரசவாத சித்த மருத்துவன்

குறுந்தொட்டி வேர் கால்(1/4) துலாம் 875 gm,

கசகசா 2 பலம் (70 gm ),

தண்ணீர் 16 படி (தூணி = 2 பதக்கு ),

நல்லெண்ணெய் 1 litter .340 ml

ஒரு பாத்திரத்தில் குறுந் தொட்டி வேர்,875 கிராம்,நைத்து போட்டு ,16 படி நீர் ஊற்றி எட்டில் ஒன்றாக ( 2 படியாக )வற்ற காய்ச்சி வடிகட்டி,70 கிராம் கசகசாவை இந்த கசாயத்தால் அரைத்து,தைல பத்திரத்தில் 1 படி நல்லெண்ணெய் (1 litter 340 ml ) ஊற்றி கசகசா சேர்த்து அரைத்த கசாயத்தை (2 படி )கலந்து பதமுற காய்ச்சி வடிக்கவும்.

இத்தைலத்தை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து,வெந்நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.

ஆண்கள் புதன்கிழமை,சனிகிழமையும்,

பெண்கள் செவ்வாய் கிழமை,வெள்ளிக்கிழமை,தைலம் தேய்க்கவும்.

ஒரு கரண்டி வீதம் காலை,மாலை,உள்ளுக்கும் சாப்பிடவும்.

80 வகை வாத நோய்கள் தீரும்.

இது அகஸ்தியர் முறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *