கழுதைப் பால்

இந்த பாலை அருந்துவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. அப்படின்னா எதுக்கு இம்புட்டு சொல்லுகிறீர்கள்?

கழுதைப் பால் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. புற்று நோய்க்கு காரணமான செல்களை அழிக்கிறது. புற்று நோயை எதிர்த்து தனியாக போராடும் அளவிற்கு நோயெதிர்ப்பு சக்தி இந்த கழுதைப் பாலில் உள்ளது. இரத்த குழாய்களின் ஸ்டெம் செல் பயன்பாட்டிற்கு இது உதவுகிறது.

புற்று நோயை குணப்படுத்தும் கீமோதெரிபி சிகச்சைக்கு இந்த கழுதைப் பால் உதவுகிறது. இந்த ஒரு பொருளே போதும் புற்று நோயை விரட்டியடிக்க.

கழுதைப் பால் எளிதில் சீரணிக்கக் கூடியது. இதில் கேசீன் கிடையாது மற்றும் குறைந்த கொழுப்பு மட்டுமே உள்ளது. இதில் நிறைய தாதுக்கள், விட்டமின்கள், இம்பினோகுளோபின் (புரதங்கள்) போன்றவைகள் உள்ளன. மேலும் கழுதைப் பால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எனவே இந்த ஆரோக்கியமான உணவை கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

பிரான்ஸ் நாட்டின் முதல் அரசரான பிரான்ஸிஸ் போரில் அதிருப்தியால் சோர்வடைந்த போது மருத்துவரின் ஆலோசனை பேரில் கழுதைப் பால் தான் குடித்து வந்தார். அது அவருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. எனவே அறிவியல் பூர்வமாக கழுதைப் பால் ஒரு மிகச்சிறந்த ஊக்க மருந்தாகும்.

கல்லீரல் நச்சு:

இந்த பாலை ஆராய்ச்சி செய்த போது இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மற்ற காலை காட்டிலும் கழுதைப் பால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. எனவே கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும்.

சரும பிரச்சினைகள்:

உங்களுக்கு பருக்கள் தொல்லை இருந்தால் அதற்கு கழுதைப் பால் சிறந்தது. உங்கள் சரும பிரச்சினைகளை துல்லியமாக போக்கி புதுப்பிக்க இது ஒரு சிறந்த மருந்து. அப்புறம் என்ன பொலிவான ஆரோக்கியமான சருமத்தை பரிசாக பெறலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்:

இந்த பால் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நோய்களை எதிர்த்து போராடி அதை குணப்படுத்த உதவுகிறது.

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:

இந்த பாலில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இதய நோய்களுக்கு உதவுகிறது. இது மூளைக்கு சிறந்தது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. சிந்தனையை துரிதப்படுத்துகிறது.

மெட்டபாலிசம்:

கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலில் கொழுப்புகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். உடல் கழிவுகளும் எளிதாக வெளியேறும்.

ஆஸ்துமா:

இந்த பாலில் உள்ள சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் ஆஸ்துமா, எக்ஸிமா மற்றும் சோரியாஸிஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மூச்சுத் திணறல், ஆஸ்துமா, இழைப்பு நோய் இருப்பவர்கள் தாராளமாக இந்த கழுதைப் பாலைக் குடித்து வரலாம்.

மலச்சிக்கல்:

இந்த பால் எளிதில் சீரண ம் அடைவதால் மலச்சிக்கலை எதிர்த்து போரிடுகிறது. இந்த பால் எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. எனவே உங்கள் குழந்தைகளுக்கு கூட நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்.

இருமல் மற்றும் மூச்சுப் பிரச்சினை:

கழுதைப் பால் இருமல் மற்றும் மூச்சுப் பிரச்சினையை போக்குகிறது. வெதுவெதுப்பாக இந்த பாலை காய்ச்சி குடித்தால் தொண்டை புண் மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த பாலை தினமும் குடித்து வந்தால் சுவாச கோளாறுகள் சரியாகும்.

மாய்ஸ்சரைசர்:

இந்த பாலில் மாய்ஸ்சரைசர் அதிகமாக காணப்படுகிறது. எனவே இதை பழங்காலத்தில் சோப்பு மற்றும் பாடி லோசன் போன்றவற்றில் பயன்படுத்தி வந்தனர். மற்ற பால்களை காட்டிலும் சருமத்தை பட்டு போல் வைக்க கழுதைப் பால் உதவுகிறது.

விட்டிலிகோ:

விட்டிலிகோ என்பது ஒரு வகை சரும நோயாகும். இந்த நோயால் நெற்றியில் வெள்ளை திட்டுகள் போன்று தோன்றும். இதற்கு காரணம் சருமத்தின் மெலனின் நிறமிகள் இழப்பே காரணமாகும். இந்த நோய் உடம்பின் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் வரலாம்.

உடல் எடை இழப்பு:

கழுதைப் பாலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடல் எடையை வெகுவாக குறைக்க உதவுகிறது. இந்த பாக்டீரியாக்கள் வேகமாக பரவி ஆற்றலை உருவாக்க உதவுகிறது. எனவே இந்த ஆற்றல் நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடுகிறது. எனவே நீங்கள் கச்சிதமாக இருக்க தினமும் கழுதைப் பாலை குடித்து வரலாம்.

கால்சியம்:

கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்பு குறைபாடு ஏற்படும். எலும்பு அரிப்பு, கால்சியம் பற்றாக்குறை போன்றவற்றை கழுதைப் பால் போக்குகிறது. ஏனெனில் இந்த பாலில் ஏராளமான கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. எலும்பின் வலிமையை அதிகமாக்குவதோடு, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களுக்கு பிறகு எலும்பில் ஏற்படும் அரிப்பை போக்குகிறது. எனவே பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கழுதைப் பாலை உணவில் சேர்த்து வருவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *