Tag Archives: கடுகுப் பொடி பற்று

தொண்டை சதை வளர்ச்சி – டான்சில்

டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சியே. இது ஒரு நிணநீர்ச் சுரப்பி ஆகும். இது இயற்கையாகவே நம்  வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இரண்டு புறமும், நாக்குக்கு அடியிலும், மூக்குக்குப்  பின்னாலும் இருக்கும். இவை நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது.

தொண்டை டான்சில் நாம் உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் கிருமியோ, வேண்டாத உணவோ அல்லது  புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே போகும்போது, அவற்றிலிருந்து துளியளவு ‘சாம்பிள்’ போல் எடுத்து ஆராய்ந்து,  அதுபற்றிய தகவல்களை உடனே மூளைக்கு தெரிவிக்கிற வேலையை தொண்டையில் உள்ள டான்சில்கள் செய்கின்றன. இது  நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த உதவுகிறது.