Tag Archives: துளசி

மிளகு

* ஒரே ஒரு மிளகு போதும்… உண்ணும் உணவு சுவையாக.

* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.

* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.

* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.

* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.*

* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.

நோயும் மருந்தும்

1. நெஞ்சு சளி
**************
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆறவைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
***************
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 இலவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
***8********************
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
***8***************
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
**************
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஓமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும். அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயுத் தொல்லை
*******8**************
வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
******8**********
வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
*****8**********
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்துக் குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
*****8***********
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
******************************
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
***********8*********
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
******8********
புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
*******8********
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
*******8*******
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸியில் அரைத்து, தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
***************************
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

உடலுக்குத் தேவை

இளமை தங்க நெல்லிக்கனி
இதயம் வலுப்பட செம்பருத்திப் பூ
மூட்டு வலி முடக்கத்தான் கீரை
இருமல், மூக்கடைப்பு கற்பூரவல்லி ஓமவல்லி
நீரழிவு அரைக்கீரை, வில்வம்
வாய்ப்புண், குடல்புண் மணத்தக்காளிகீரை
உடல் பொன்னிறமாக பொன்னாங்கண்ணி கீரை
மாரடைப்பு மாதுளம் பழம்
ரத்தத்தை சுத்தமாக்க அருகம்புல்
ரத்த அழுத்தம் துளசி, பசலைக்கீரை
ரத்த சோகை பீட்ரூட்
புற்று நோய் சீதா பழம்
மூளை வலிமை பப்பாளி பழம்
நீரிழிவு முள்ளங்கி
வாயுத் தொல்லை வெந்தயக் கீரை
மார்பு சளி, இருமல் சுண்டைக்காய், தூதுவளை
சளி, ஆஸ்துமா ஆடாதொடை.
ஞாபகசக்தி வல்லாரை கீரை
அஜீரணம் அன்னாசி பழம், புதினா
முடி நரை கல்யாண முருங்கை முள் முருங்கை
கண்பார்வை கூட கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்
மஞ்சள் காமாலை கீழாநெல்லி
சிறுநீரக கல் வாழைத்தண்டு

தொண்டை சதை வளர்ச்சி – டான்சில்

டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சியே. இது ஒரு நிணநீர்ச் சுரப்பி ஆகும். இது இயற்கையாகவே நம்  வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இரண்டு புறமும், நாக்குக்கு அடியிலும், மூக்குக்குப்  பின்னாலும் இருக்கும். இவை நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது.

தொண்டை டான்சில் நாம் உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் கிருமியோ, வேண்டாத உணவோ அல்லது  புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே போகும்போது, அவற்றிலிருந்து துளியளவு ‘சாம்பிள்’ போல் எடுத்து ஆராய்ந்து,  அதுபற்றிய தகவல்களை உடனே மூளைக்கு தெரிவிக்கிற வேலையை தொண்டையில் உள்ள டான்சில்கள் செய்கின்றன. இது  நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த உதவுகிறது.