பிளவை

ஊமச்சியின் சதையை எடுத்து விளக்கெண்ணை விட்டு அரைத்துக் கட்டவும். பின்பு சுறுகாஞ்சொறிக் கொழுந்து, மகிழங்கொழுந்து, கல்லுப்பு சேர்த்து அரைத்துப் புண்ணுக்கு காலை மாலை கட்டவும்.

ஆராத புண்

இரசம், காரீயம், மிளகு, கடுகு, கருங்குங்கிலியம் எருக்கு கரி வகைக்கு பலம் மூன்று, துத்தம், வெள்ளைப் பாசாணம், கந்தகம் வகைக்குப் பலம் ஒன்று இவைகளைப் பொடித்துப் புண்களுக்குப் புகை போடவும்.

இதுவும் அது:
பருத்தி இலை, வேப்பம்பட்டை, ஆலம்பட்டை, தவசி முருங்கைவேர், நாயுருவிவேர், கிளுவைவேர், கருஞ்சீரகம், ஓமம், சுக்கு, திப்பிலி, வெள்ளை வெங்காயம், சிறுகீரைவேர் ஓர் அளவு கூட்டி இடித்து நல்லெண்ணையிலிட்டு காய்ச்சி புரையோடு புண்களுக்கு சீலையில் நனைத்து வைக்கவும். வாய் விரிந்த புண்ணுக்கு எண்ணையைப் பஞ்சில் நனைத்துப் போடவும்.
உள்வினையற விழும்பிச் சாறு சேர்த்துச் சாப்பிடவும். புளிம்பிரண்டை, சமூலமிடித்து களிகிண்டி நல்லெண்ணை வெல்லம் சேர்த்து உண்ணவும். கருஞ்சூரைப் பட்டையை இடித்து வீக்கத்திற்கு வைத்துக் கட்டவும்.

கிரந்திப்புண், மேகக்கட்டி, சிலந்திப்புண்

வெள்ளைக் குங்கிலியம், கார்போக அரிசி, மனிதன் எலும்பு, வகைக்கு விரகன் இரண்டு, வெங்கக்கல் பொடி விராகன் நாங்கு, கந்தகம் விராகன் ஒன்று, ஆக சேர்த்துப் பொடித்து வெங்கல வட்டிலில் இட்டு சிறிது நல்லெண்ணை கூட்டி செம்புக் குவளையால் அரைத்து களிம்பு செய்து போடவும்.

குலைப்புண்

இரசம் பலம் 3, காரீயம், வெள்ளைப் பாசாணம், சாதிலிங்கம், துத்தம், துருசு, கெளரி பாசாணம் வகைக்குப் பலம் ஒன்று, நாபி பலம் இரண்டு, இவைகளைப் பொடியாக்கி தீபத்தின்மேல் வைத்து சூடாக்கிய ஓட்டில் சிறிது பொடியைப் போட்டுக் கட்டவும். மூன்று நாள் கட்ட வீக்கம் கரையும்.

அரையாப்பு கட்டி, புண்களுக்கு

அரையாப்பு பிளேக் (Bubonic plague) விலங்குவழி தொற்று நோயாகும். சிறிய கொறிணிகளில் வாழும் தெள்ளு (பூச்சி)கள் மூலமாக இது பரவுகிறது. எர்சினியா பெசுட்டிசு என்ற கோலுயிரி ஏற்படுத்தும் மூன்று வகை பிளேக் நோய்களில் இதுவும் ஒன்றாகும்.

கொடிவேலி, சிறுகளா, சங்கு, ஆடுதின்னாப்பாளை இவற்றின் வேர் வகைக்கு பலம் ஒன்று, இவற்றின் சாறில் அரைத்து ஒன்பது உருண்டை செய்து, ஒரு உருண்டை இரு வேளையாக குழியில் புளியந்தணல் உண்டாக்கி நாலரை நாள் புகை போடவும்.
பத்தியம்:- மோருஞ்சோறும், வெங்காயமும் 25 நாட்கள் சாப்பிடவும்.

கண்டமாலை

தைராயிடு சுரப்பியின் அசாதாரணமான வீக்கமே கண்டமாலை என அழைக்கப்படுகிறது. தைராயிடு சுரப்பியின் வீக்கத்தால் கழுத்தும் குரல்வளையும் வீக்கம் அடைகின்றன.

புங்கம்வேர், ஆயில்பட்டை, தூதுவளைவேர், கழற்சிவேர், வெள்ளறுகு, நிலஆவரைவேர், சங்கங்குப்பிவேர், அவிரிவேர், சுக்கு, மிளகு, அப்பக்கோவைக் கிழங்கு, வெள்வெங்காயம், கருங்குங்கிலியம், வாய்விளங்கம், கடுகு, வெந்தயம், திப்பிலி மூலம், கண்டுபரங்கி வகைக்கு பலம் ஒன்று, சிற்றரத்தை பலம் 5, திப்பிலி பலம் 8 இவைகளை இடித்து, 3பட் நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி கடுகு பதத்தில் வடித்து இரண்டு விராகனிடை காலை மாலை உட்கொள்ளவும். பத்தியம் காக்கவும்.

இதுவுமது:

அரிதாரத்தை நீல நிறமாகச் சுட்டு நீரில் அரைத்து சிலையிலூட்டி திரியேற்றப் புண்ணும், சீழும் மாறும்.
கழலை அரையாமல் புண்ணாகாமல் கட்டியாக இருந்தால் அந்தக் கழலையை அறுத்து திரி போடவும்.
மூன்று அல்லது நான்கு நாள் சென்றபின் செம்புண்ணானால் வெள்ளைக் குங்கிலியம், படிகாரம், மயில் துத்தம், பொன்மெழுகு வகைக்கு விரகன் ஒன்று பொடித்து சிறிது நல்லெண்ணையிட்டுக் காய்ச்சி தண்ணீரில் விட்டு எடுத்து வெங்கல வட்டிலில் போட்டு செம்புக்குவளையால் அரைத்து களிம்பு செய்து துணியில் தடவிப் புண்ணுக்குப் போடவும். மறு நாள் புளியந்தழை அவித்த தண்ணீரில் கழுவவும்.